காந்தியடிகளின் 150வது ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்.
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை முதலமைச்சர் சந்திக்கிறார். அப்போது, தமிழகத்தின் முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவர்களிடம் முதலமைச்சர் வழங்குகிறார். மத்திய அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களுக்கு, உடனடியாக நிதி ஒதுக்கவும் முதலமைச்சர் கோரிக்கை விடுக்க உள்ளார். மேலும், பிற்பகலில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் காந்தியடிகளின் 150வது ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.
Discussion about this post