முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் 2-ஆம் இடம் பிடித்த மாணவி பாயல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது 500க்கும் மேற்பட்டோர் முதலமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். காவலர்களின் குறைகளைக் களைய 4வது காவல் ஆணையம் அமைத்து அறிவிப்பு வெளியிட்டதற்காக தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர் சங்கத்தினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
Discussion about this post