மதுரை வடபழஞ்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக, மதுரை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சர், வடபழஞ்சியில் ELCOT தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 900 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். 3 தளங்கள் கொண்ட சிகிச்சை மையத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
Discussion about this post