கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
கஜா புயலின் கோரத் தாண்டவத்தால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பெரும் அளவிற்கு சேதம் ஏற்பட்டது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், பெரிய அளவில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், முழு வீச்சில் சீரமைப்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த 20-ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கஜா புயல் பெரும் சேதத்தை சந்தித்துள்ள நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சரும்,துணை முதலமைச்சரும் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
இதற்காக சென்னையில் இருந்து காரைக்கால் விரைவு ரயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை சென்றடைந்தார். முன்னதாக, நேற்று மாலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சாலை மார்க்கமாக சென்றடைந்தார். புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடும் அவர்கள், பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்குகின்றனர்.
Discussion about this post