தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதியுடன் ஓய்வு: முக்கிய வழக்குகளில் விரைவில் தீர்ப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமர்வு விசாரித்து வரும் முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் வரும் 17-ந் தேதிக்கு முன்பு அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அயோத்தி வழக்கு, ரபேல் வழக்கு, சபரிமலை அய்யப்பன் கோயில் வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே வரும் 18-ந் தேதி பதவியேற்கவுள்ளார். இவர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

Exit mobile version