அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

 

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

07.04.201 மற்றும் 08.04.2021: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

குமரிக்கடல் பகுதியில் ( 1 கிலோமீட்டர் உயரம் வரை ) நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக09.04.201 முதல் 11.04.2021 வரை: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

Exit mobile version