சென்னை மற்றும் நெல்லைக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையானது அடுத்த மாதம் இறுதியில் இயக்கப்பட இருக்கிறதாக ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி, அதிவிரைவு பயணம் உள்ளிட்ட பல அம்சங்கள் பொருந்திய இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயிலானது இயக்கப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முக்கியமாக சென்னையில் இருந்து சென்னை முதல் கோவை மற்றும் சென்னை முதல் மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சென்னை முதல் நெல்லை இஅடையே வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கு ரயில்வேத் துறை திட்டமிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அடுத்த மாதம் இறுதியில் சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்துள்ளதாக ரயில்வேத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சென்னை – நெல்லை இடையேயிலான வந்தே பாரத் ரயில் அக்டோபர் அல்லது நவம்பரில் தான் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முன்கூட்டியே தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்பதால் வந்தே பாரத் ரயிலில் முதற்கட்டமாக 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தடைவதற்உகு 10 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் வந்தே பாரத் 8 மணி நேரத்தில் வந்தடையும். இதனால் பொதுமக்களுக்கு இரண்டு மணி நேரங்கள் மிச்சமாகிறது. இதேபோல படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை படுக்கை வசதிகளுடைய பெட்டிகள் அமல்படுத்தப்பட மாட்டாது. எனவே, சென்னை நெல்லை வழித்தடத்தில் 8 பெட்டிகளிலும் இருக்கைகள் உட்கார்ந்து செல்லும் வகையிலேயே அமைக்கப்பட உள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 4 ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.