மதுரவாயல் பகுதியில் தொடர் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் விடியா திமுக ஆட்சியில் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை வாகன ஓட்டிகளை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. அப்படி என்ன புல்லரிக்கும் நடவடிக்கை? பார்ப்போம்.
போலீஸ் பாதுகாப்போட, திருநங்கை ஒருவர் இப்படி சாலையோரமா பூசணிக்காய சுத்தி, திருஷ்டி கழிக்கிறது எங்க தெரியுமா, சென்னை மதுரவாயல் சாலையிலதான்…
சென்னையில மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகள்ல அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் தொடர்கிறது. வியாழக்கிழமை கூட அடுத்தடுத்து நிகழ்ந்த ரெண்டு விபத்துகள்ல, 2 பேர் உயிரிழந்திருக்காங்க… போலீஸ் தரப்புல இருந்து, போக்குவரத்து நெரிசலயும் விபத்துகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கிறதா சொல்லப்பட்டாலும், தினந்தோறும் இந்த சாலைகள் எல்லாம் யாருடைய ரத்தத்தையாவது டேஸ்ட் பண்ணாம விடுறதில்ல…
இப்படி ரத்தப்பழிவாங்குதே இந்த சாலைகள் எல்லாம்… ஒருவேளை இது ஏதாவது பேய் சேட்டையா இருக்குமோன்னு போலீஸ்காரங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு… எதுக்கும் ஒரு கழிப்பு கழிச்சிடுவோமேன்னு, எங்கெல்லாம் அடிக்கடி விபத்து நடக்குதோ அந்தப் பகுதியில போய் திருஷ்டி பூசணிக்காய் உடைச்சிருக்காங்க… இதுக்காக காருலேயே ஒரு திருநங்கைய கூட கூட்டிட்டு போய், இந்த திருஷ்டி கழிப்ப செஞ்சிருக்காங்க…
சாலையோரமோ போலீஸ் பாதுகாப்போட திருநங்கை ஒருத்தரு திருஷ்டி பூசணிக்காய் சுத்துறத அந்தப்பக்கமா போன வாகன ஓட்டிகள் எல்லாம் பார்த்து மெர்சலாயிட்டாங்க…
அதே நேரத்துல ரோட்டோரமா திருஷ்டி பூசணிக்காய உடைச்சி விபத்து ஏற்பட வழிவகுக்குறவங்க மேல நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸே இப்படி பண்ணலாமான்னும் சிலபேரு ஹெல்மெட்டுல அடிச்சிகிட்டு போயிருக்காங்க…
எப்படியோப்பா… வெள்ளிக்கிழமை அதுவுமா பூசணிய உடைச்சிட்டோம்… விபத்து நடக்காம இருந்தா சரிதான்னு போலீஸ்காரங்க பேசிக்கிட்டே அடுத்த பாயிண்டுக்கு திருநங்கைய காருல ஏத்திட்டு போயிட்டாங்க.