வாகன சோதனையின்போது, குற்றவாளிகளை துரத்தி சென்று 1கோடியே 56 லட்சம் ரூபாயை மீட்ட கோட்டூர்புரம் உதவி ஆய்வாளர் ராமு உள்ளிட்ட 3 பேரை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.
சென்னை, கோட்டூர்புரம் பகுதியில் கொள்ளையர்களால் வீசிச் செல்லப்பட்ட 1கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய், நந்தனம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. கோட்டூர்புரம் பகுதியில் உதவி ஆய்வாளர் ராமு, சக்திவேல், அண்ணாசாமி ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் சென்று கொண்டிருந்தவர்களை போலீசார் துரத்தியபோது, அவர்கள் தங்களிடம் இருந்த இரண்டு பைகளை சாலையில் வீசிச் சென்றனர். பைகளை சோதனை செய்து பார்த்தபோது அதில் 1கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருப்பது தெரியவந்தது.
இதனிடையே தொழிலதிபர் பாலசுப்பிரமணியன், சைதாப்பேட்டை காவல் நிலைத்தில், தனது வீட்டில் இருந்து 1கோடியே 70 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக புகார் அளித்திருந்தார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பாலசுப்பிரமணியன் வீட்டில் இருந்து 1கோடியே 70 லட்சம் ரொக்கம், 4 தங்க வளையல்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்தை கைப்பற்றிய காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேரை அழைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.
Discussion about this post