சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு குறைந்த கட்டணத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய குளிர்சாதன பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 500 புதிய பேருந்துகள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு பல்வேறு வசதிகளுடன் கூடிய இரண்டு குளிர்சாதன பேருந்து சேவைகளையும் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு பேருந்து இருக்கையின் மேல் பகுதியில் அளவை கட்டுப்படுத்தும் குளிர்சாதன வசதி, புஷ் பேக் சீட், ஏர் வென்டிலேட்டர், எல்இடி லைட் என தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இதன் முதல் சேவை இலவசமாக வழங்கப்பட்டதால், மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.