டெங்கு காய்ச்சலை தடுக்க சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

பருவமழை காலங்களில் உருவாகும் டெங்கு காய்ச்சலை தடுக்க பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பருவமழை காலங்களில் உருவாகும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், சிகிச்சை நடைமுறைகள் எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்த பயிற்சி கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர், பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், தண்ணீர் தேங்கி நிற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சென்னையில் மழைநீர் சேகரிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய மாநகராட்சி ஆணையர், முதல் கட்டமாக சென்னையில் இரண்டு லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Exit mobile version