சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடையில்லை

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சீமான், தமிழக அரசையும், முதலமைச்சரையும் விமர்சித்து அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால், முதலமைச்சர் சார்பில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரியும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும், சீமான் நேரில் ஆஜராக விலக்களிக்கவும் மறுத்துவிட்டார். இந்த மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன் விசாரணையை மார்ச் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Exit mobile version