சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வரும் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை தசரா விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அவசர வழக்குகளை விசாரிக்க 16ம் தேதி விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும். அவசர வழக்குகளை 15ம் தேதி மதியம் 1.30 மணிக்குள் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணன் ராமசாமி, பார்த்திபன், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
மதுரைக் கிளையில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், முரளிதரன், கார்த்திகேயன் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.
Discussion about this post