மீனம்பாக்கத்தில் 73 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச மழைப் பதிவு – வானிலை மையம்!

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை மைய அலுவலகத்தில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசியவர்,

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் மற்றும் ஒரு சில இடங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பெய்து உள்ளது. தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதியில் அனேக இடங்களிலும், அடுத்து வரும் இரு தினங்களுக்கு 20, 21 தினங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கனமழை பொறுத்தவரையில் அடுத்து 24 மணி நேரத்திற்குள் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரை தமிழக கடற்கரை பகுதிகள் குமரி கடல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசப்படும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதியில் அடுத்து வரும் எனது தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் 24 மணி நேரங்களில் மழை தொடரும், ஒரு சில பகுதிகளில் கனமழையாக இருக்கக்கூடும்.

மீனம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. முன்னதாக 1996 ஆம் ஆண்டு 282.2 மில்லி மீட்டர் பதிவாகி இருக்கிறது. தற்போது 158.2 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 16 சென்டிமீட்டர் வித்தியாசம் உள்ளது. நுங்கம்பாக்கத்தை பொறுத்தவரையில் கடந்த 73 வருடங்களில் மூன்றாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. 1996 ஆண்டில் 347.9, மில்லி மீட்டர், 1991இல் 191.9 மில்லி மீட்டர் தற்போது 84.7 மலை பதிவாகியுள்ளது. இந்த மாதத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை என்பது கடந்த ஒன்று முதல் இன்று வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இயல்பு மழையளவு 34.4 மில்லி மீட்டர். பதிவான மழை அளவு 30.5 மில்லி மீட்டர் இது 11% இயல்பை விட குறைவு என தெரிவித்தார். கனமழை மாவட்டத்திற்கான வாய்ப்பு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் கடலூர் ராணிப்பேட்டை டெல்டா மாவட்டங்கள் கனமழைக்க வாய்ப்பு. ஐந்து தினங்களாகவே மழை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறோம், மேலும் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறோம், சென்னைக்கு தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, வளிமண்டல மேலடுக்கு சூழற்ச்சி காரணமாக மழைப்பொழிவு வேறுபடும் என தெரிவித்தார்.

Exit mobile version