சென்னையில் உள்ள பண்டைய இசை கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள, பழமையான இசை கருவிகளின் அருங்காட்சியமான “சங்கீத வாத்யாலயா”-வை 1957 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் ராஜேந்திரபிரசாத் தொடங்கி வைத்தார். இந்த அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற கைவிணை பொருட்கள் வளர்ச்சி ஆணையம் முயற்சித்து வருவதாக கீழ்பாக்கத்தை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அதுவரை அருங்காட்சியத்தை டெல்லிக்கு மாற்றுவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்