ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை – சென்னை உயர்நீதிமன்றம்

 

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனையால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் இதனால் ஆன்லைன் மருந்து விற்பனைக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரியும், தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்த ஜனவரி 31-ம் தேதிக்குள் விதிமுறைகளை வகுக்கவேண்டும் என்றும், மத்திய அரசு விதிமுறைகளை வகுக்கும்வரை ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய விதிகளுக்கு உட்பட்டு மத்திய அரசு அனுமதித்த பிறகு ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யலாம் என்று ஆணையிட்ட நீதிமன்றம், விதிமுறைகளை வகுத்து அரசிதழில் வெளியிட்ட பின் இரண்டு மாதங்களில் மருந்து நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.

Exit mobile version