108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

தீபாவளியன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திப்பார்கள் என்பதால், ஆம்புலன்ஸ் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சேலத்தைச் சேர்ந்த செல்வராஜன் என்பவர் பொது நல மனுதாக்கல் செய்தார்.

தீபாவளி பண்டிகையின்போது ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் சட்ட விரோதமானது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் சுப்பிரமணிய பிரசாத் அமர்வு, அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் ஆம்புலன்ஸ் சேவை இருப்பதால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட தடை விதித்து உத்தரவிட்டார்.

Exit mobile version