சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக் கொண்டார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
Discussion about this post