பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகபாரம் ஏற்றும் படி நிர்பந்திக்க கூடாது, வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சென்னை துறைமுகத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாள் ஒன்றிற்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கண்டெய்னர்கள் வரை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பணிகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முடிவு எட்டும் வரை கண்டெய்னர் லாரிகளை இயக்க போவதில்லை என லாரி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.