குடிப்பதற்கு தண்ணீர் இல்லை அண்ணா நீங்களே வந்து பாருங்க காலி டப்பா தான் இருக்கு என்று காண்பித்த பள்ளி மாணவர்களால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் இந்த அவல நிலை தான் இருக்கிறது என்று வேதனையுடன் கருத்து தெரிவிக்கிறார்கள் பள்ளி மாணவர்கள். மேலும் இடவசதி இல்லாமல் சமூக நலக் கூடத்தில் செயல்பட்டு வரும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பிடம் இல்லாததால் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
மாணவர்களுக்கு தாகம் எடுத்தால் அருகில் இருக்கக்கூடிய வீடுகளில் சென்று தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு மழைக்காலங்களில் தார்ப்பாயின் உதவி இல்லாமல் மாணவ மாணவிகள் படிக்க முடியாத அவலமும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானம் கூட இல்லாமல் ஆபத்தை உணராமல் வாகனங்கள் செல்லும் பிரதான சாலையில் விளையாடுகின்றனர். இதுவரை பள்ளி கட்டிடங்களை தரம் உயர்த்துவதற்கு முன் வராத சென்னை மாநகராட்சியைக் கண்டுகொள்ளுமா இந்த விடியா திமுக ஆட்சி!
விடியா திமுக அரசின் திராவிட மாடல் பள்ளி இதுதானா…!
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளிகளில் ஏழை எளிய மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் படிக்க முடியாத ஏழை எளிய கூலித தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகிறார்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிர்த்து வருகின்றது.
அந்த வகையில் சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் பகுதியில் உள்ள கண்ணப்பர் நகர் பகுதியில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றன. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. முதல் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாமல் அரசு பள்ளிகளை நாடி வருகின்றனர்.
இதனால் இந்த ஆண்டு ஏராளமான குழந்தைகள் மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்த பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகள் இல்லை. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் இந்த மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை இல்லாமல் அருகே உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் வைத்துப் பாடம் நடத்தப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது இந்த சமுதாய நலக் கூடத்தில் படிக்கும் மாணவர்கள் அருகில் மயான பூமி இருப்பதால் மாணவர்கள் சரியாக படிக்க முடியவில்லை என்பதும் இவர்களுக்கு குடிநீர் கூட இங்கு இல்லை என்பதும் திடீரென்று தாகம் ஏற்பட்டால் அருகில் இருக்கக்கூடிய குடியிருப்புகளில் சென்று மாணவ மாணவிகள் தண்ணீர் வாங்கி குடிப்பதும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திடீரென்று இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பிடம் இல்லை என்பதும் மாணவர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இருக்கின்ற ஒரு கழிப்பிடம் கூட ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க சாலையில் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே இருக்கக்கூடிய பள்ளி கட்டிடத்தில் புதிய வசதிகள் இல்லாமலும் மழைக் காலங்களில் மழைநீர் வகுப்பறைக்குள் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது மழைக்காலங்களில் தார்ப்பாய் போட்டபடி மாணவர்கள் கல்வி கற்கும் அவலம் ஏற்படுகிறது.
இது மட்டுமில்லாமல் விளையாடுவதற்கு பள்ளியில் மைதானம் இல்லாததால் வாகன செல்லும் பிரதான சாலையில் விளையாடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல நேரங்களில் மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடையும் சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது.
இதனையும் பள்ளியில் இருக்கக்கூடிய உடற்பயிற்சி ஆசிரியர் அருகில் இருந்தாலும் வாகனங்கள் செல்லும் வழியில் மாணவர்கள் விளையாடு வருகின்றனர்.
அங்கு நாம் சென்று காட்சிகள் பதிவு செய்த பொழுது அதனை பார்த்த உடற்பயிற்சி ஆசிரியர் உடனடியாக பள்ளி மாணவர்களையும் மாணவிகளையும் இனி விளையாட வேண்டாம் வாங்க எனக் கூறி உள்ளே அழைத்துச் சென்றார். அடிப்படை வசதிகள் இல்லாமல் கூட மாணவர்கள் இன்னும் முறையாக கல்வி பயில முடியவில்லை என்பது பெரும் வேதனை அளிக்கிறது என பெற்றோர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வரும் மேயர் சென்னை மாநகராட்சி அரசின் பள்ளிகள் 80 சதவீதம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் மாமன்னன் திரைப்படத்திற்கு ரிவ்யூ கொடுக்கும் மேயர் பிரியா இதுபோல மாநகராட்சி பள்ளிகளின் அவல நிலையை கண்ணுக்குத் தெரியவில்லையா தக்காளி என்னுடைய டிபார்ட்மெண்ட் இல்லை என சொன்ன பிரியா தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்திற்கு வகுப்பறை கூட இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்பதுதான் விடியா திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
மேலும் திமுக நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் தரம் உயர்த்தாத இந்தப் பள்ளிகளுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு பள்ளி கட்டிடங்கள் தரம் உயர்த்தப்பட வேண்டும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி தரம் உயர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை நம் காட்சிப்படுத்த சென்ற பொழுது அங்கு ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய பள்ளி மாணவர்கள் அனைவரும் இங்கு தண்ணீர் வசதி கூட இல்லை வேண்டுமென்றால் நீங்களே பாருங்கள் காலியான டப்பா தான் இருக்கிறது. பள்ளியில் படிப்பதற்கு இட வசதிகளும் இல்லை இதனால் ஏற்கனவே அதிகாரிகளிடம் போராட்டம் நடத்தியும் எந்த பலனும் இல்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அங்கு இருக்கக்கூடிய பொதுமக்கள் கூறுகையில் சாலையில் விளையாடுகிறார்கள். நாங்கள் வாகனத்தில் சென்றால் எங்கள் மீது தான் படுகிறது. இதனால் தாங்களும் கீழே விழுகிறோம் மாணவர்களுக்கும் காயம் ஏற்படுகிறது என தெரிவித்து வருகின்றனர்.