மேற்குவங்கத்தின் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளான நிலையில், அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதியதில், 238பேர் உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானகா ரயில் நிலையம் அருகே ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் சென்னை கோரமண்டல் விரைவு ரயிலின் தடம்புரண்ட பெட்டிகள், அருகில் உள்ள மற்றொரு தண்டவாளத்தில் விழுந்துள்ளன. அப்போது எதிர்திசையில் யஸ்வந்தபூரில் இருந்து ஹவுரா சென்ற விரைவு ரயில், தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் அடுத்தடுத்து மோதியதில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி இருநூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த தொள்ளாயிரத்திற்க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் தற்போது 238 ஆக உயர்ந்துள்ளது.