பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 18 மிகப்பெரிய நகரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் அதிக குற்றங்கள் நடைபெறுவது தெரியவந்துள்ளது. மேலும் சென்னை மற்றும் கோவை நகரங்களில் குற்றச் சம்பவங்கள் குறைவாக உள்ளதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான நகரங்களாக விளங்குவதாகவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. டெல்லியை தொடர்ந்து பெங்களூரு நகரமும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக உள்ளதாகவும், இந்தூர் நகரம் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாக உள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.