நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பாக இரண்டு முறை விண்கலம் அனுப்பப்பட்டிருக்கிறது. முதல் முறை 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22ல் அனுப்பப்பட்டது. அதுதான் சந்திரயான் – 1 ஆகும். இது அப்போது நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்தது. பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜுலை 22-ல் இரண்டாவது விண்கலம் அனுப்பப்பட்டது. அதுதான் சந்திரயான் – 2 ஆகும். இந்தத் திட்டத்தில் நிலவில் தரையிரங்கி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால் விண்கலம் நிலவில் சரிவர தரையிரங்காமல் தோல்வியில் முடிந்தது. அன்று இந்தியாவே கண்ணீர் விட்ட சம்பவம் அனைவரும் அறிந்த உண்மை.
சந்திரயான் 2 தோல்வி..!
2019 ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தாலும் தரையிரங்குவதில் சிக்கல் ஏற்ப்பட்டது. அதே ஆண்டு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் உள்ளே பிரக்யான் எனப் பெயரிட்ட ரோவர்தான் நிலவின் மேற்பரப்பில் உலவி சோதனைகள் செய்ய காத்திருந்தது. ஆனால் அப்போது ரோவர் சாதனம் செயல்படாமல் போனது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பேரதிர்ச்சி அடைந்தனர். அன்றைய இஸ்ரோ தலைவர் சிவன் தேம்பி தேம்பி அழுதக் காட்சிகள் ஊடகத்தில் பரவி அனைவரையும் கண்கலங்க செய்தது.
இந்த தடவை மிஸ் ஆகாது!..
கடந்த முறை அனுப்பபட்டது போலவே இந்த முறையும் விக்ரம் லேண்டர் சாதனம், பிரக்யான் ரோவர் சாதன் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை அடங்கிய விண்கலம் எல்.வி.எம்-3-எம்-4 ராக்கெட் மூலம் நாளை பிற்பகல் 2 மணி 25 நிமிடங்களில் சந்திரயான் 3 ஏவப்பட உள்ளது. மேலும் லேண்டர் சாதனம் அடுத்த மாதம் 23 அல்லது 24 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும், அதுவரை இந்த விண்கலம் பூமியை 56 முறை சுற்றி வரும். சந்திராயன் -3 திட்டத்தின் மிக முக்கிய அம்சம், புரெபல்ஷன் எனப்படும் உந்து இயந்திரம் அனுப்பப்படுகிறது. இது, நிலவில் லேண்டர் சாதனத்தை ‘டெலிவரி’ செய்ததும், அங்கிருந்து பூமியை நோக்கி நிறுத்தப்படும்.
இது பூமியில் உள்ள வளங்கள், மனிதர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை ஆய்வு செய்யும். இதன் காரணமாக மற்ற உலகத்தில் மனிதர்கள் வாழ்கிறார்களா அல்லது மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்ஹ்டு ஆராய முடியும் என்றும் கூறுகின்றனர். இந்த புதிய ஆய்வு, விண்வெளியில் உள்ள மற்ற கோள்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும் எதிர்காலத்தில் உதவும் என்பது மட்டும் நிச்சயம். இதுவரை அமெரிக்க, சீனா, சோவியத் யூனியன் ஆகியவை மட்டுமே நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்து உள்ளன. அந்த வரிசையில் நான்காவது நாடாக தற்போது இந்தியா இடம்பெறுவது வரலாற்று சாதனையாகும்.
ஜூலை மாதத்தில் ஏவப்படுவதற்கான காரணம் என்ன?
ஜூலை மாதத்தில் தான் பூமியும் நிலவும் கிட்டத்தில் இருக்கும். ராக்கெட் செலுத்தப்பட்டதும், 16 நிமிடத்தில், புரெபல்ஷன் கலம், ராக்கெட்டில் இருந்து தனியாக பிரிந்து செல்லும். இது, பூமியை 56 முறை சுற்றி வரும். பூமியில் இருந்து குறைந்த பட்சம், 170 கி.மீ தூரத்திலும், அதிகபட்சம், 36,500 கி.மீ தூரத்திலும் சுற்றி வரும். இதன் வாயிலாக கிடைக்கும் வேகம்தான் நிலவு வரை செல்ல உதவும். ராக்கெட்டில் இருந்து பிரிந்ததும், ரோவர், லேண்டர் சாதனங்களுடன் கூடிய புரெபெல்ஷன் கலம் நிலவை நோக்கி பயணிக்கும். நிலவில் இருந்து 100 கிமீ தூரத்தை எட்டிய பின், லேண்டர் சாதனம் பிரியும். நிலவின் வடக்கு துருவத்தை விட, தென் துருவம் பரப்பளவு அதிகம். மேலும் இது எப்போதும் பூமிக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதால் இருட்டாகவே இருக்கும். அதனால்தான், தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரோவர் சாதனம் நிலவில் தரையிறங்கிய பின், ஒரு நிலவு நாள் மட்டுமே அது செயல்படும். அறிவியலின்படி, ஒரு நிலவு நாள் என்பது, பூமியை பொறுத்தவரை 14 நாட்களுக்கு சமமாகும். அதன்பின், அதன் ஆயுள் காலம் முடிந்து விடும். அதற்குள், நமக்கு தேவையான தகவல்களை அது திரட்டி தரும்.