நிலவை ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் மூன்றாவது செயற்கைகோளான சந்திரயான் – 3 இன்று சரியாக பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இந்தியாவின் விண்வெளி மற்றும் ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது நேற்று வியாழக்கிழமை செலுவதற்கான 25.30 மணி நேர கவுண்டவுனைத் தொடங்கிவிட்டது. அதனையொட்டி தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து எல்விஎம்-3 ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 ஆனது தோல்வி அடைந்ததையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகினர். விண்கலம் சரியாக ஏவப்பட்டிருந்தாலும், விக்ரம் லேண்டரானது சரியாக தரையிறங்க முடியாமல் நிலவில் வெடித்து சிதறியது. ஆனால் சிறிதும் களக்கம் கொள்ளாமல் இம்முறையும் விக்ரம் லேண்டர் மூலம் லூனார் சர்பேசில் தரையிறக்க முடிவு செய்துள்ளது இஸ்ரோ.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளே இதுவரை நிலவில் லேண்டரை தரையிறக்கி சாதனை செய்த நாடுகள். அதற்கு பிறகு இந்தியாதான் அந்த சாதனை செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளது. எனவே இந்தியாவின் இந்த சாதனைக்கு நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தித்து வருகிறார்கள்.