“சந்திரயான் – 3” எடுத்த முதல் வீடியோ! இஸ்ரோ வெளியீடு! இந்தியா பெருமிதம்!

சந்திரயான் – 3 விண்கலமானது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் அனுப்பட்ட நேரத்தில் காணொளி ஒன்றினை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியுள்ளது. அந்த காணொளியினை இஸ்ரோ அமைப்பானது நேற்று வெளியிட்டிருந்தது.

கடந்த மாதம் ஜூலை 14 ஆம் தேதி நிலவின் தெற்கு பகுதியினை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியிருந்தது இஸ்ரோ. வெற்றிக்கரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு நிலவுக்கான சுற்றுப்பாதைக்குள் நினைத்ததுபடியே நுழைந்தது. அவ்வாறு நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் ‘சந்திரயான் – 3’ விண்கலம் அனுப்பப்பட்ட நேரத்தில் அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டு இருந்த உயர் தொழில்நுட்ப கேமாரா தான் நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து இருக்கிறது. இந்தக் காணொளிக் காட்சிகளை இஸ்ரோ தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த காணொளி கிட்டத்தட்ட 45 வினாடிகள் ஓடக்கூடியது. நிலவின் மேற்பரப்பு பகுதிகளும், விண்கலத்தின் சில பகுதிகளும் தெளிவாக தென்படுகின்றன. அதிலும் நிலவின் மேற்பரப்பானது மிக அழகாக காட்சியளிப்பை காண முடிகிறது.

சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் செல்லும் ‘சந்திரயான் – 3’ விண்கலமானது அதிகபட்சம் என்ற கணக்கில் பதினெட்டாயிரம் கிலோ மீட்டராகவும், குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டர் அளவிலும் சுற்றி வர உள்ளது. வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் – 3 விண்கலம் மென்மையான முறையில் தரையிரங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிலவில் தரையிரங்கிய பிறகு, நிலவின் மேற்பரப்பு தொடர்பான தரவுகளை சந்திரயான் – 3 வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version