சந்திராயன் – 2 விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பினர் என்ன சொல்கிறாகள் எனபதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்…
அறிவியல் அறிவைப் புகட்டாத கல்வியால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பார்கள். அந்தவகையில், அடிப்படை கல்வி பயிலும் காலத்திலேயே மாணவர்களை, விஞ்ஞானிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது ஒரு அமைப்பு. ஆம்..சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனம் தான் இது..
ஒரு சிறிய விண்வெளி ஆய்வி மையமாகவே காட்சியளிக்கிறது ஸ்பேஸ் கிட்ஸின் அலுவலகம். இங்கிருக்கும் சிறுவர்கள் தான் உலகின் சிறிய செயற்கைக்கோளை நாஸாவின் மூலம் விண்ணில் செலுத்தியவர்கள் என்பது நம்புவதற்கு கடினமானதாக இல்லை. இந்த சாதனை மாணவர்கள், இந்தியாவின் சாதனையாகப்போகும் சந்திராயன் இரண்டைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அறிய முயன்றோம்.
சந்திராயன் 2 வெற்றிகரமாக செலுத்தப்படுவதன் மூலம் விண்வெளிதுறையில் வலிமை வாய்ந்த நாடாக இந்தியா மாறும் என்றும், இதுவரை ஆய்வு செய்யப்படாத சந்திரனின் தெற்கு பகுதியினை ஆய்வு செய்து புதிய வரலாற்றை இந்தியா படைக்கும் என்றும் பெருமிதம் தெரிவிக்கிறார் space kids ஆய்வுகளின் இயக்குநர் ஸ்ரீமதி கேசன்.
எத்தனையோ வல்லரசு நாடுகள் நிலவை ஆராய்ந்திருந்தாலும், 2008-ல் இந்தியாவால் ஏவப்பட்ட சந்திராயன் – 1 தான், முதன் முதலில் நிலவில் தண்ணீருகான மூலக்கூறுகள் இருப்பதை உலகிற்கு சொன்னது. இரண்டாவது முறையும் வரலாறு படைக்கப்போகும் சந்திராயன் – 2ன் வெற்றி இந்திய மாணவர்களின் கவனத்தை விண்வெளி ஆய்வின் பக்கம் திருப்பும் என்பதில் ஐயமில்லை. இதன்மூலம், கிராமத்து மாணவர்களையும் அதிநவீன செயற்கைகோள் விஞ்ஞானிகளாக்கும் தங்கள் கனவு வெகுவிரைவில் பலிக்கும் என்று நம்புகின்றனர் ஸ்பேஸ் கிட்ஸ் வழிகாட்டிகளும், மாணாவர்களும்.
Discussion about this post