நிலவை சுற்றி வரும் சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 2 விண்கலம் ஜூலை 22ம் தேதி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. நிலவை நோக்கி பயணித்த சந்திரயன் 2 விண்கலம் செவ்வாயன்று காலை 9 மணி அளவில் நிலவின் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இஸ்ரோ அறிவித்தபடி நேற்றுப் பிற்பகல் 12 மணி 50 நிமிடங்களுக்கு சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆயிரத்து 228 நொடிகள் நீடித்ததாகவும், நிலவை சுற்றி வரும் சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்று வட்டப் பாதை குறைந்த பட்சமாக 118 கிலோ மீட்டர் அளவாகவும்,அதிகபட்சமாக 4 ஆயிரத்து 412 கிலோ மீட்டர் அளவிலும் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்த நிகழ்வு, 28ம் தேதி காலை மேற்கொள்ளப்பட்டு சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை மீண்டும் மாற்றியமைக்கப்படும்.
Discussion about this post