தெலங்கானாவின் முதலமைச்சராக 2-வது முறையாக சந்திரசேகர் ராவ் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலங்கானா சட்டபேரவையின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ஆட்சியை கலைத்துவிட்டு சந்திரசேகர் ராவ் மீண்டும் தேர்தலை சந்தித்தார். அதில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 88 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி 21 இடங்களிலும், பா.ஜ.க ஒரு இடத்திலும் இதர கட்சிகள் 9 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. இந்தநிலையில் 2-வது முறையாக தெலங்கானாவின் முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் நாளை பதவியேற்க உள்ளார்.