தெலங்கானாவில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 48,000 பேர் பணிநீக்கம்

தெலங்கானாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்துத் தொழிலாளர்கள் 48 ஆயிரம் பேரை மாநில அரசு பணி நீக்கம் செய்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தெலங்கானா அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்துத் தொழிலாளர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு வராதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் எனவும் அரசு எச்சரித்தது. அதன் பின்னும் பணிக்கு வராத தொழிலாளர்கள் 48 ஆயிரம் பேரைத் தெலங்கானா அரசு பணி நீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் அடக்குமுறைக்கு அடிபணியப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், அரசின் நடவடிக்கையைக் கண்டித்து ஐதராபாத்தில் மாபெரும் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, பேரணி நடத்த அனுமதி இல்லை எனவும், அனுமதியின்றிப் பேரணி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Exit mobile version