தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சின்ன கல்லாறில் 3 சென்டி மீட்டர் மழையும், வால்பாறையில் 1 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

Exit mobile version