வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒரு சில பகுதியில் இரண்டு நாட்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பலத்த மழை வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version