இந்தியா-பாக். போட்டி தொடர்பாக மத்திய அரசே முடிவு செய்யும்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடுவது குறித்து மத்திய அரசே முடிவு செய்யும் என்று, பிசிசிஐ இடைக்கால தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து ஆலோசிக்க பிசிசிஐயின் நிர்வாகக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ நிர்வாக குழு உறுப்பினரும், இடைக்கால தலைவருமான வினோத் ராய், ஐபிஎல் கிரிக்கெட்டின் தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாகவும், விழாவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடுவது குறித்து மத்திய அரசே முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version