2017-2018-ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான 386 கோடியை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும் என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
35-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையான 4 ஆயிரத்து 458 கோடி ரூபாயை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ஜிஎஸ்டி சட்டங்களுக்கு திருத்தங்களை மேற்கொள்வது, சினிமா டிக்கெட்டுக்களை இ-டிக்கெட்டிங் முறையில் வழங்குவது, சுற்றுப்புற சூழலுக்கு உகந்ததாக கருதப்படும் மின் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பது உள்ளிட்டவைகளை குறித்து தமிழகத்தின் கோரிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் எடுத்துரைத்தார்.
மேலும், தண்ணீர் பிரச்சினையை அரசியலாக்கி திமுக ஆதாயம் தேட முற்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஒருபோதும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டதில்லை என்று குற்றம்சாட்டினார்.