காடு வளர்ப்புத் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு 47ஆயிரத்து 436 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
தொழிற்சாலைகள், புதிய குடியேற்றங்கள், நெடுஞ்சாலை, ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களுக்காகக் காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. அதை ஈடுகட்டும் வகையில் மற்ற பகுதிகளில் காடுகளை வளர்க்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 47 ஆயிரத்து 436 கோடி ரூபாயை மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது.
இந்த நிதியைக் காடு வளர்ப்பு, நீர்ப்பிடிப்புப் பகுதி மேம்பாடு, வனவிலங்கு மேலாண்மை, காட்டுத் தீ தடுப்பு ஆகியவற்றுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அலுவலர்களுக்கு ஊதியம், பயணப்படி, மருத்துவச் செலவு ஆகிய நிர்வாகச் செலவுக்குப் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.