நாடு முழுவதும், 99 சதவிகித குடும்பங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு இணையதளத்தில் மின்சார வசதி தொடர்பான புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதிவரை, 21 கோடியே 23 லட்சம் குடும்பங்கள் மின் இணைப்பு பெற்றிருக்கின்றன. இதன்மூலம், நாட்டில் மின்சார வசதி பெற்ற குடும்பங்கள் 99 புள்ளி ஏழு எட்டு சதவீதமாக உயர்ந்துள்ளது. 4 லட்சத்து 70 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்இணைப்பு தர வேண்டியுள்ளது.
சத்தீஸ்கர், மேகாலயா, ராஜஸ்தான், அசாம் ஆகிய நான்கு மாநிலங்களை தவிர மற்ற 25 மாநிலங்களில், 100 சதவிகித குடும்பங்கள் மின்சார வசதி வழங்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதத்திற்குள், நாட்டில் 100 சதவிகித குடும்பங்களுக்கும் மின்வசதி என்ற சாதனை நிகழ்த்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.