வெளிநாட்டிலுள்ள பொருளாதார குற்றவாளிகள் 58 பேரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு

பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு, வெளிநாடு தப்பிச் சென்ற 58 பேரையும் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் தான் ஏமாற்றியதாக கூறப்படும் பணத்தை மீட்பதை விட, தன்னை இந்தியாவிற்கு அழைத்து வரவே மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டுவதாக விஜய் மல்லையா குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில், பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி உள்ளிட்ட 58 பேரையும் இந்தியா கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில், சர்வதேச காவல்துறை மூலம் ரெட் நோட்டீஸ் அனுப்பி, நாடு கடத்தும் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version