இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் 2021 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் அமைப்பு மீது தடை தொடரும். தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சட்டவிரோத தடைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜுவ் காந்தி 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதில் இருந்து விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.