நடுத்தர பிரிவினருக்கு பயன் அளிக்கும் வகையில் இடைக்கால பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பதவிகாலம் முடிந்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பிப்ரவரி 1-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சமீபத்தில் பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இந்த இலக்கின்படி பார்த்தால் வருமான வரி உச்சவரம்பு 5 லட்சமாக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதே போன்று, கார்ப்பரேட் வரியும் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படலாம் எனத் தெரிகிறது. பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு பொருளாதார சலுகை திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.