புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய டிச. 20-ம் தேதி வரை காலஅவகாசம் – மத்திய அரசு

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜி.எஸ்.டி தாக்கல் செய்ய டிசம்பர் 20-ம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கஜா புயலால் கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகப்பட்டினம், தேனி, தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி, கரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் உள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் சீர்க்குலைந்திருப்பதால் அவர்கள் ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதனை ஏற்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கும் வரும் டிசம்பர் 20-ம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோல் தித்லி புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version