’கல்வி அறிவு காரணமாக இந்தியாவில் மக்கள்தொகைப் பெருக்கம் குறைந்துவருகிறது’ – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

minister jaishankar

கல்வி அறிவு மற்றும் சமூக விழிப்புணர்வு காரணமாக இந்தியாவில் மக்கள் தொகை குறைந்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்தியாவின் மக்கள் தொகை உயர்வு விகிதம் குறைந்து வருவதாகவும், குடும்பங்களின் அளவு சுருங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியாகவும், 2030-ல் 150 கோடியாகவும், 2050-ல் 166 கோடியாகவும் இருக்கும் என ஐநா மதிப்பீடு செய்துள்ளது. தற்போது உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 17.5 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version