அந்தமானின் சென்டினல் தீவிற்கு செல்ல தடை விதிப்பது குறித்து மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்து வருகிறது.
அந்தமானில் சென்டினல்கள் என்ற பழங்குடியினர் அதிகமாக வசித்துவரும் வடக்கு சென்டினல் தீவு தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து அந்தமானுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், சென்டினல் தீவிற்கு உரிய அனுமதி இன்றி சென்றதாக தெரியவந்தது. இதுவரை இதுபோன்ற 44 விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த தீவிற்கு சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்க இளைஞர் பழங்குடியினர்களால் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, அந்த தீவிற்கு வெளியாட்கள் செல்வதற்கு மீண்டும் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.