தமிழகத்துக்கு கூடுதலாக உரங்களை வழங்க மத்திய அரசு அனுமதி

சம்பா பருவத்திற்காக கூடுதல் உரம் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, கூடுதலாக ஒரு லட்சம் டன் யூரியா, 60 ஆயிரம் டன் பொட்டாசியம், 90 ஆயிரம் டன் கூட்டு உரம் மற்றும் 60 ஆயிரம் டன் டிஏபி  ( DAP ) உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தது. இதன் அடிப்படையில், 80 ஆயிரம் டன் யூரியாவை முதற்கட்டமாக வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மற்ற உர வகைகள் விரைவில் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Exit mobile version