கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பைக்கப்பட்ட ஊரடங்குகளால் ஏறக்குறைய எல்லாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. புத்தகக்கடைகள் மட்டும் விதிவிலக்கா என்ன?
ஆனால், மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் வழிக்கல்வியாக மாற்று அவதாரம் பெற்றுவிட்டன. வீடுகளில் இருந்தபடி கல்வி கால்நகர்த்தத் தொடங்கிவிட்டது. ஆனால், NCERT உள்ளிட்ட பாடத்திட்டங்களின் நூல்கள் கிடைக்காமல் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கல்வியின் சீரான இயக்கத்தை உறுதி செய்யும் வகையில், இணைய வழி பாடப்புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட ட்வீட்டில் , “வகுப்பு 1 முதல் 12 வரையிலான என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களை இந்த epathshala.nic.in இணைப்பிலிருந்து பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.