திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் ஆதாரங்கள் குறித்து மத்திய குழுவினர் மற்றும் ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பில் ஜெல் சக்தி அபியான் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மூலம் இந்தியா முழுவதும் நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, அணையின் நீர்மட்டம், குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு உள்ளிட்டவைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அணைக்கு வரும் நீரின் ஆதாரத்தை அதிகரிக்கச் செய்தல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.