அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம், வாங்கிய கடன்களுக்கான வட்டி, மானியம் ஆகியவை தவிர்க்க இயலாத செலவுகள் என்று தமிழக அரசு வகைப்படுத்தி உள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2016-17 ஆம் நிதியாண்டில், இந்த செலவுகளை எதிர்கொள்ள மொத்தம் 94 ஆயிரத்து 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது என்றும், தற்போது, 61.85 சதவீதமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2015-16-ல் இது 59 புள்ளி 09 சதவீதமாக இருந்ததாகவும், கடந்த 2016-17-ல் அரசு ஊழியர்களுக்கான சம்பளத்துக்கு 39 ஆயிரத்து 246 கோடி ரூபாயும், ஓய்வூதியம் வழங்க 18 ஆயிரத்து 879 கோடி ரூபாயும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன்களுக்கான வட்டிக்கு 20 ஆயிரத்து 533 கோடி ரூபாயும், மானியங்களுக்கு 16 ஆயிரத்து 92 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மானியங்களில் மிக முக்கியமானதாக உணவு மானியம் உள்ளது என்றும், பொது விநியோக திட்டத்திற்காக 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய கணக்கு தணிக்கைத் துறை கூறியுள்ளது. இப்படியாக, அரசின் நிகர வருமானத்தில் பெரும் பகுதி தவிர்க்க முடியாத கட்டாய செலவுகளுக்காக ஒதுக்கப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கணக்கு தணிக்கைத் துறை அறிக்கை
-
By Web Team
- Categories: இந்தியா
- Tags: அரசு ஊழியர்கள்நிதி அதிகரிப்புமத்திய கணக்கு தணிக்கைத் துறை
Related Content
அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான வழக்கு: தமிழக அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கும்
By
Web Team
February 11, 2019
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்
By
Web Team
January 29, 2019
மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்
By
Web Team
January 27, 2019
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
By
Web Team
January 27, 2019
இந்த சம்பளம் போதாதா? - மக்கள் கொந்தளிப்பு...
By
Web Team
January 27, 2019