சென்னையில் கொள்ளைபோன காவலரின் கைப்பேசி மேற்கு வங்கத்தில் கண்டுபிடிப்பு

சென்னையில் கொள்ளை போன போக்குவரத்து காவலரின் கைப்பேசியை மேற்கு வங்கத்தில் இருந்து காவல்துறையினர் மீட்டனர்

பூக்கடை காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல்துறை காவலராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை. இவர் என்.எஸ்.சி போஸ் சாலையில் கடந்த மாதம் பணியில் இருந்த போது அவரது கைபேசி கொள்ளை போனது. இது தொடர்பான புகாரை பெற்றுக்கொண்ட பூக்கடை குற்றப்பிரிவினர் விசாரணையைத் தொடங்கினர். ஐ எம் ஈ எனப்படும் எண்ணைக் கொண்டு செல்போன் மேற்கு வங்கத்தில் இருப்பதை உறுதிசெய்தனர். கைப்பேசியை வைத்திருக்கும் மதில் என்ற நபரை தொடர்புகொண்டு பேசியபோது, தான் பழைய கடையில் கைப்பேசியை வாங்கியதாகவும், அதனை மீண்டும் ஒப்படைத்து விடுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, கூரியர் மூலம் கைப்பேசி தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் காவலர் அண்ணாதுரையிடம் அவரது கைப்பேசி ஒப்படைக்கப்பட்டது

Exit mobile version