ஊரடங்கு காரணமாக, ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்று படித்துறைகளுக்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு 12 மணி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளின்றி பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஆடிப்பெருக்கு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது. காவிரி ஆற்று படித்துறைகளில் ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் புதுமணத் தம்பதிகள் யாரும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட நீர்நிலைகளுக்கு வரவேண்டாம் என்றும் ஊரடங்கை கடைப்பிடித்து காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
Discussion about this post