கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும், குற்றச்செயல்களைத் தடுப்பதற்காகவும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பூக்கடை காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பூக்கடை மற்றும் யானைக்கவுனி பகுதியில் ஆயிரத்து 200 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
கண்காணிப்பு கேமராக்களால் சென்னையில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளதாகவும், திருடுபோன பொருட்களை மீட்பதிலும் கண்காணிப்பு கேமராக்கள் உதவிகரமாக உள்ளது என்றும் விஸ்வநாதன் குறிப்பிட்டார்.
Discussion about this post