இந்தியாவிலே பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வி7- நொளம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 1000சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை தொடக்கி வைத்து பேசிய மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், சிசிடிவி கேமரா பொறுத்துவதற்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார், மூன்றாம் கண் இயக்கத்தில் சிசிடிவி தொடங்கப்பட்டுள்ளது எனவும், சென்னை பெருநகரத்திலே 1000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, 362 இணைப்பு ஏற்படுத்திய முதல் காவல் நிலையம் வி7 நொளம்பூர் காவல் நிலையம் என்று கூறிய அவர், சிசிடிவி கேமரா இருப்பதினால் குற்ற சம்பவங்களை உடனடியாக கண்டுப்பிடிக்க முடிகிறது, மேலும் இரண்டு தினங்களுக்கு முன்பு புளியேந்தோப்பு பகுதி குழந்தை கடத்தல் வழக்கில் உறுதுணையாக இருந்தது சிசிடிவி காட்சி தான், சிசிடிவி காட்சியை வைத்து கொண்டு 8மணி நேரத்தில் குழந்தையை மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளோம், அதுமட்டும் இல்லாமல், பாதுகாப்பான நகரமாக சென்னை மாறி வருகிறது.
சென்னை மாநகரம் முழுவதும் செயின்பறிப்பு மற்றும் மொபைல் பறிப்பு சம்பவம் குறைந்துள்ளது. நமது பாதுகாப்புக்கான முதலீடு ஆகையால் சிசிடிவி கேமராக்களை அனைத்து பகுதிகளிலும் பொறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது என்றும் மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி, அண்ணா நகர் உதவி ஆணையர் டாக்டர் சுதாகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post