மேற்கு வங்கத்தில் காவல் ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகள் சிறைபிடிப்பு

மேற்கு வங்கத்தில், கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை, போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க, அவருடைய இல்லத்திற்கு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அப்போது, காவல்துறையினர், சிபிஐ அதிகாரிகளை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் குதித்துள்ளார்.

சிபிஐ மூலம், மத்திய அரசு தங்களை மிரட்ட முயல்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த பதட்டமான சூழ்நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், மத்திய ரிசர்வ் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பரபரப்பான சம்பவம் தொடர்பாக, சட்ட வல்லுநர்களுடன் சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ், அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, சிறைபிடிக்கப்பட்ட சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர்.

Exit mobile version